திருவாரூர் அருகே பொதக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் பேஸ் தொடர் போட்டியில் 25க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடின – முதலிடம் பிடித்த கூத்தாநல்லூர் அணிக்கு பரிசு தொகையுடன் பதக்க கோப்பை வழங்கப்பட்டது*
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி பகுதியில் மாவட்ட அளவிலான கேரம் பேஸ் தொடர் போட்டி இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்றது. கிங்ஸ் கிளப் மற்றும் அஹமதியா நண்பர்கள் இணைந்து நடத்தும் இந்த மாவட்ட அளவிலான கேரம் பேஸ் போட்டியை தொழிலதிபர் ஜாகிர் உசேன் பாபு தொடக்கி வைத்தார்.
இப்போட்டியில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கேரம் போர்டு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மொத்தம் 25க்கும் மேற்பட்ட அணிகள் இந்த கேரம் பேஸ் தொடர் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. நாளொன்றுக்கு 12 சுற்றுகள் வீதம் 2 நாட்களில் மொத்தம் 24 சுற்று போட்டிகள் நடைபெற்றன.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்த அணிகளுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.
மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம் பிடித்த கூத்தாநல்லூர் அணிக்கு முதல் பரிசாக 5000 ரூபாயுடன் பதக்கக்கோப்பை வழங்கப்பட்டன. இரண்டாம் இடம்பிடித்த அத்திக்கடை அணிக்கு மூன்றாயிரம் ரூபாயுடன் பதக்கக் கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த பொதக்குடி அணிக்கு பதக்கக்கோப்பை உடன் 2000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இந்த விளையாட்டு போட்டியை ஒருங்கிணைத்து நடத்தும் பணியில் ஈடுபட்ட கலிபா, ஹாஜி, அப்துல் கரீம், கொத்துபுதீன், துரை உள்ளிட்ட பலருக்கும் நினைவு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன

















