தமிழக மாணவர்களின் நலனுக்காக மாணவர்களின் கல்வி நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க முன்வர வேண்டும் எனவும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழக மாணவர்களின் கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் எனக்கூறி கடந்த 27ஆம் தேதி முதல் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இரண்டாம் நாளான நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்த நிலையில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே.வி. குப்பம் சட்ட மன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி சசிகாந்த் செந்திலை சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி நிதியை வழங்க ஒதுக்க முன்வர வேண்டும் எனவும்,அதே நேரத்தில் சசிகாந்த் செந்தில் திருவள்ளூரில் உள்ள அவரது அலுவலகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில் தமிழக தலைநகரில் அல்லது டெல்லியிலேயோ அவர் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அவருக்கு தாம் ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும், தமது கட்சி பிரமுகர் ஒருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை காண்பதற்காக வந்ததாகவும் அதே நேரத்தில் சசிகாந்த் செந்திலை சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் அவர் தெரிவித்தார் உடன் புரட்சி பாரதம் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.எம்.ஸ்ரீதர் . மாநில செயலாளர் கூடப்பாக்கம் குட்டி ஒன்றிய செயலாளர் ஒதிக்காடு காடு தாமஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.

















