சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தென்னாம்பட்டினம் பாடசாலை தெருவை சேர்ந்தவர் வடிவேலு மகன் ஸ்ரீகாந்த்.13. கோனையாம்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 7ம் வகுப்பு பயிலும் பிரசன்னா.12. சென்ற மாணவனும் இன்று காலை வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்குச் சென்றுள்ளனர். வழியில் தென்னாம்பட்டினம் பாலம் அருகே பின்னால் அதிவேகமாக வந்த வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீகாந்த் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பிரசன்னாவை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அவசர ஊர்தி மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார் விரைந்து வந்து இறந்த மாணவன் ஸ்ரீகாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப்பதிந்து டிராக்டர் ஓட்டுநர் பெருந்தோட்டம் குருமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளி சென்ற மாணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

















