ஆற்காடு கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பாமக சார்பில் ஆட்சியரிடம் மனு.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு கிராமத்தில் இருந்து வீரமடை செல்லும் சாலையில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்றக்கோரி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கிராம பொதுமக்கள் மற்றும் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மதுபானக் கடையால் பள்ளி மாணவ, மாணவிகள் அச்சத்துடன் அந்த வழியாகச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், இரவு நேரங்களில் பெண்கள் நடமாட முடியாத அளவிற்கு அச்சுறுத்தலான சூழல் நிலவுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மது அருந்துபவர்கள் மதுபாட்டில்களை விவசாய நிலங்களில் உடைத்து வீசுவதால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினர்.
பாமக மாவட்ட செயலாளர் பாலசக்தி பேட்டி உள்ளது







