அரசியல் தலைவர்கள் மீது பொதுமக்களுக்குள் நிலவும் மரியாதையும் மதிப்பும், சில சமயங்களில் அவர்களை ஒரு தெய்வங்களாகவே பார்க்கும் அளவுக்கு செல்வதாக நாம் காண்கிறோம். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு தான் ஹரியானாவைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் என்பவர்.
பாஜகவை ஆதரித்து, “நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்கும் நாள்வரை நான் செருப்பு அணியமாட்டேன்” என 14 ஆண்டுகளுக்கு முன் எடுத்த சபதம், இன்று உண்மையாக்கப்பட்டிருக்கிறது.
ராம்பால் காஷ்யப் என்பவர், மோடி பிரதமராக பதவியேறிய பிறகும், தனது சபதத்தை மீறாமல், தொடர்ந்து செருப்பே அணியாமல் தனது வாழ்வை நடத்தி வந்தார். மோடியின் வெற்றியை தன் சுயவாழ்விலும் பிரதிபலிக்க விரும்பிய அவர், இதுவரை அதே பாதையில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் யமுனாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ராம்பால் காஷ்யப்பை நேரில் சந்தித்தார். 14 ஆண்டுகளாக செருப்பு அணியாமல் இருந்த அவருக்கு நேரில் சென்று ஒரு ஜோடி செருப்பை பரிசளித்தார்.
இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பிரதமர் மோடி பதிவு செய்யும் போதே நெஞ்சை நெகிழ வைக்கும் வார்த்தைகளை பகிர்ந்துள்ளார்.
“நான் பிரதமராக பதவியேற்கும் வரை செருப்பு அணியமாட்டேன் என ராம்பால் ஜி எடுத்த சபதம் மிகவும் ஆழமானது. அவரைப் போல் அன்பு செலுத்தும் நபர்களால் தான் நான் பணிவுடன் இருக்கிறேன். அவர்களின் பாசத்தையும் உணர்வையும் நான் மதிக்கிறேன். ஆனால், இந்நிலையில், சமூக நலன் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படுங்கள் என்பதே என் வேண்டுகோள்.”
மோடியின் இந்த நடத்தை, அவரது மனிதநேயத்தையும் தொண்டர்களை மதிக்கும் தன்மையையும் வெளிக்கொணர்ந்துவிட்டது. இந்த வீடியோ மற்றும் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.