“திட்டமிட்ட சதி.. விஜய்க்கு தெரியும் என்ன செய்ய வேண்டும்” – மன்சூர் அலிகான் கருத்து

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் துயரத்தை குறித்து நடிகர் மன்சூர் அலிகான் உருக்கமாக கருத்து தெரிவித்தார்.

நுங்கம்பாக்கம் இல்லத்தில் “ஓடிக்கொண்டே இருடா” ஆல்பம் பாடலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “என் சொந்த ஊர் கரூர் பள்ளப்பட்டி. இரண்டு நாட்களாக தூங்க முடியவில்லை. அந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எப்படிப் பட்ட வேதனையை அனுபவித்திருக்கிறார்கள் என்று நினைத்தாலே மனசு கலங்குகிறது. நம்ம நாட்டில் இப்படி நடப்பது மிகவும் அவமானம்” என்றார்.

அரசியல் குற்றச்சாட்டுகளைப் பற்றி அவர், “விஜயின் வளர்ச்சி சிலருக்கு பிடிக்காமல் இருக்கிறது. கொள்கை ரீதியாக எதிர்க்கலாம். ஆனால் சொந்த மக்களை இழக்கும் அளவுக்கு அரசியல் செய்யக்கூடாது. நான் விஜய்க்கு ஆதரவு தருகிறேன்; அவர் என் தம்பி போலவர்” என்று தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருந்ததாகவும், “விஜயை அங்கே இருக்க விடாமல் கிளம்பச் சொன்னார்கள். பிறகு அவர் எப்படி பதில் சொல்லுவார்? இது திட்டமிட்ட சதி. ஆனால், தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க நேரிடும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை விஜய் நன்றாக அறிவார்” என்றும் மன்சூர் அலிகான் கூறினார்.

Exit mobile version