நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாக உருவாகும் ‘பராசக்தி’ படத்தை இயக்கி வருகிறார் புகழ்பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா தேர்வாகியுள்ளார். இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
‘பராசக்தி’ திரைப்படம் இந்தி மொழி திணிப்பை மையமாக கொண்டு உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இலங்கையில் இப்படத்தின் சில முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று பொள்ளாச்சியில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மதராஸி’ திரைப்படத்திற்கான சில காட்சிகளில் நடித்துக் கொடுத்ததற்காக சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் இடைவேளை எடுத்திருந்தார். தற்போது ‘மதராஸி’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, மீண்டும் ‘பராசக்தி’ படக்குழுவுடன் இணைந்துள்ளார்.

















