டெல்டா மாவட்டத்தை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பை மீறி, ஓஎன்ஜிசி நிறுவனம், மராமத்து என்ற பெயரில் எண்ணை எரிவாயு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் எதிர்ப்பு, விதிகள் எதுவும் மீறப்படவில்லை என ongc நிர்வாகம் விளக்கம் :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரம் பகுதியில் kut – 9 என்ற எண்னெய் எரிவாயு கிணறு அமைந்துள்ளது. பழைய கிணறு ஆன இதில் மராமத்து பணிகளை மேற்கொள்வதற்காக ஓஎன்ஜிசி நிறுவனம், பெரிய ராட்சச குழாய்கள் கொண்டுவந்து பணிகளை ஆரம்பித்துள்ளது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் புதிய எண்ணெய் எரிவாயு கிணறுகள் அமைக்க தடை உள்ள நிலையில், பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்வதாக தெரிவித்து, விதிகளை மீறி ஒஎன்ஜிசி நிர்வாகம் நடந்து கொள்வதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் சமீபத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ராஜகோபாலபுரம் ஒஎன்ஜிசி எண்ணெய் கிணறு பகுதியில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் தலைமையில் அப்பகுதி முதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட குவிந்தனர், அவர்களை வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கிராம மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஓஎன்ஜிசி கிணற்றில் பணிகளை தொடர வேண்டும் என வருவாய் துறையினர் அறிவுறுத்தினர். ஓஎன்ஜிசியின் இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பேராசிரியர் ஜெயராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் ஓஎன்ஜிசி நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு அதிகாரி சிவசங்கர் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ஓ என் ஜி சி நிர்வாகம் எந்தவித விதி மீறலிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.
பைட்:-
பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

















