ஸ்டார்லிங்க் தொலைத்தொடர்பு சேவைக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில், அதன் கட்டணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு , “எங்களுக்கு ஜியோ, ஏர்டெல் சேவை போதும் ‘சாமி’ என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டார்லிங்க் சேவை பெற வேண்டும் என்றால், அதற்கு முதலில் Device வாங்க வேண்டும் , அதன் விலையே 33 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது இல்லாமல், ஒவ்வொரு மாசமும் 3000 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும், இதுதான் குறைந்த விலை என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே Airtel, Jio போன்ற நிறுவனங்கள் எந்த விதமான டிவைஸ் கட்டணமும் இல்லாமல், குறைந்தபட்சம் 200 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தாலே போதும். ஆனால், 33 ஆயிரம் ரூபாய் Device மற்றும் 3000 ரூபாய் குறைந்தபட்ச ரீசார்ஜ் என்பது நமக்கு கட்டுப்படியாகாது என்று பலர் புலம்பி வருகின்றனர்.
இந்தியாவில் இருக்கின்ற தொலைத்தொடர்புத் துறையின் கடும் போட்டிக்கு இடையே இந்த அளவுக்கு பெரிய கட்டணத்துடன் அறிமுகமாகும் Starlink, பொதுமக்களின் ஆதரவைப் பெறுமா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.