திருமணத்திற்குப் பிறகும் பிரபலங்களின் வாழ்க்கை தொடர்ந்து விமர்சனங்களுக்கும் வதந்திகளுக்கும் ஆளாகி வருகிறது. நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன், நீண்ட நாட்களாக காதலித்து 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
தம்பதியர் வாடகைத் தாய் மூலமாக இரட்டைய குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அப்போதே, அவர்கள் ஏற்கனவே ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டிருப்பதைத் தாங்களே உறுதிப்படுத்தினர். இதனால் அவர்கள் நடத்திய பிரம்மாண்ட திருமணம் உண்மையில் பெயரளவிலானதாக இருந்தது என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், சமீபத்தில் நயன்தாரா தனது கணவர் மீது அதிருப்தி கொண்டதாகக் காட்டும் ஒரு சமூக வலைதள பதிவு வெளியானது. இதனால், தம்பதியர் விவாகரத்து செய்யவுள்ளனர் என்ற வதந்திகள் இணையத்தில் வேகமாக பரவத் தொடங்கின.
இந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில், நயன்தாரா இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். “இது தான் எங்கள் பதில்” எனக் கூறும் வகையில், தங்கள் இணைப்பை உறுதிப்படுத்தும் இந்தப் பதிவு, வதந்திகளை முற்றிலும் மறுக்கும் வகையில் அமைந்துள்ளது.

தற்போது, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்கள் இரட்டைய மகன்களுடன் நேரம் கழிக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். இவ்வாறு சமூக வலைதளங்களில் இருந்து, தங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவே நகர்ந்து வருகிறது என்பதை இருவரும் நிரூபித்து வருகின்றனர்.