உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் பங்கேற்று திருமுறை இசைப்பெருவேள்வி விழா ஆன்மீக ஆனந்தம் மற்றும் டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட் உலக சாதனை படைத்தனர். மேலும் கழுகு பார்வை வீடியோ காட்சிகள் வெளியாகியது.
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆன்மீக ஆனந்தம் மற்றும் டிவைன் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பதிவு பெறும் வகையில் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று திருமுறை இசைப்பெருவேள்வி விழா மற்றும் உலக சாதனை நிகழ்வு 2025 நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தேவாரம், திருப்பதிகம் பாடினர் . தமிழ்நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள மலேசிய நாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து வந்து நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமதா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் , திருக்கைலாய பரம்பரை வேலாக்குறிச்சி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சத்ய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆசி உரையாற்றினர்.
தியாகராஜர் திருக்கோவிலில் 1000க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் பங்கேற்று திருமுறை இசை பெருவேள்வி விழா உலக சாதனை நடைபெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது .















