மன்னார்குடியில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சார்பில் நடைபெற்ற அணிவகுப்பு பேரணியில் 300-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் நாடு முழுவதும் அந்த அமைப்பின் சார்பில் அணிவகுப்பு பேரணி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தமிழகத்தில் 128 இடங்களில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், ஆர் எஸ் எஸ் அமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றனர். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற் று வருகிறது அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற பேரணியை . கே.எஸ்.டி. சாம்பசிவம் கொடியசைத்து தொடங்கி வைத்தார் இந்தப் பேரணி பந்தலடி, காந்தி சாலை, ருக்மணி பாளையம், தேரடி, பெரியார் சிலை வழியாகச் சென்று பந்தலடி யில் நிறைவடைந்தது . இதில் 300-க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் சீருடையில் அணிவகுத்துச் சென்றனர். பேரணியை முன்னிட்டு மன்னார்குடியில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்







