புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் மழையில் உணவு தேடி புறப்பட்ட 30-க்கு மேற்பட்ட மாடுகள்:-
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 8:30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 25 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்த நிலையில் அதனை தொடர்ந்த இரண்டு மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பலத்த மழை பெய்து வரும் நிலையில் புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் வசிக்கும் கால்நடை உரிமையாளர் ஒருவர் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்ட நிலையில் 30-க்கு மேற்பட்ட மாடுகள் கன மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தவாறே மேய்ச்சலுக்காக புறப்பட்டன.

















