மதுராந்தகம் இடைத்தேர்தல் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற வேண்டும் என்பது தொடர்பாக அமைச்சர் ஆதவ அர்ஜுனா நிர்வாகிகளுடன் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்களுக்கு ஆதரவாக, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த இடைத்தேர்தலில், கட்சியின் வெற்றிக்கான தேர்தல் உத்திகள் மற்றும் வாக்கு சேகரிப்புப் பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து மதுராந்தகத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது













