சீர்காழி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- ரூ. 52,280 பறிமுதல்- வரி வசூல் செய்த ரூ. 2, 20,546 இருப்பில் இல்லாதது கண்டுபிடித்து விசாரணை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் இன்று மாலை கலால் தாசில்தார் சதீஷ்குமார் தலைமையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் அருள் பிரியா மற்றும் போலீசார் நகராட்சி அலுவலகத்தின் வாயிலை பூட்டி சோதனையில் ஈடுபட்டனர்.பின்னர்
அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் முக்கிய பதிவுகள் ,ஊழியர்கள் செல்போன் G pay ஆகியவற்றை போலீசார் சோதனை செய்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டதில் நகராட்சி ஊழியர்கள் ஐந்து பேரிடமிருந்து கணக்கில் வராத ரூ.52,280 கைப்பற்றப்பட்டது. மேலும் நகராட்சி வரி வசூல் செய்த ரூ. 2,20,546 இருப்பில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.













