மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலை விசர்ஜனத்துக்காக காவிரி ஆற்றுக்கு பம்பை உடுக்கை பச்ச காளி ஆட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது:-
விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களின் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை நகரில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 60க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் காவிரி ஆற்றில் இன்று கரைக்கப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறை காமராஜர் சாலையில் உள்ள கண்கொடுத்த விநாயகர் கோயிலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை விசர்ஜனத்திற்காக இன்று பச்சைக்காளி ஆட்டத்துடன் விமரிசையாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பம்பை உடுக்கை மேள வாத்தியங்கள் முழங்க பட்ச காளி ஆட்டத்துடன் பாஜக மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் மோடி கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் துறவிகள் பலர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்














