பி.வி.கே. ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) தயாரிப்பில் பா. விஜயன் வழங்கும் திரைப்படம் ‘மெசன்ஜர்’. இப்படத்தில் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் இதற்கு முன் ‘கன்னிமாடம்’, ‘யுத்தகாண்டம் பாத்திரகாட்’ (மலையாளம்) போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும், மேலும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சார்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தவராவும் அறியப்படுகிறார்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்து, தற்போது வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி, சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ‘மெசன்ஜர்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். இதன்போது, படக்குழுவினரை நேரில் சந்தித்து, சிறப்பான முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்து, தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.