‘BAD GIRL’ படம் ஆண்களுக்கு புரியாது ; பெண்களிடம் கேட்கவேண்டும் – இயக்குனர் மிஸ்கின்

சென்னை:
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரிப்பில், வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள Bad Girl திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளின் மத்தியில் திரையரங்கிற்கு வரத் தயாராகியுள்ளது.

அஞ்சலி சிவராமன், டீஜெ உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி 26ஆம் தேதி வெளியான டீசர், காட்சிகளும் இயக்குனரின் கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, தணிக்கை சான்றிதழ் பெறுவதிலும் எதிர்ப்புகள் எழுந்தன.

பெரிய விமர்சனங்களும் எதிர்ப்புகளும் நிலவிய நிலையில், Bad Girl செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரீ–ரிலீஸ் விழா நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் வெற்றிமாறன், இயக்குனர் வர்ஷா பரத், இயக்குநர் மிஸ்கின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இயக்குனர் வர்ஷா பரத்,
“ட்ரெய்லர் வெளியானபோது பலர் இது கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்று விமர்சித்தனர். ஆனால், கலாச்சாரத்தை காக்க வேண்டிய வேலை பெண்களுக்கல்ல. பெண்களை பாதுகாக்கவே கலாச்சாரம் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் மிஸ்கின்,
“ஏன் படத்திற்கு Bad Girl என்று பெயர் வைத்தார் என்பதை கவனிக்க வேண்டும். வர்ஷா சமூகத்தை சாடுவதற்கோ, புரட்சிகரமாக பேசுவதற்கோ வரவில்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கை, ஆசைகள், அந்தரங்கத்தைப் பேசும் படம்தான் இது. அதை ஆண்களுக்கு முழுமையாகப் புரிவதில்லை. பெண்களிடம் கேட்க வேண்டும். பெண்களுக்குப் படம் மிகவும் பிடித்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version