- திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்
- வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு சிறப்பு
வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியுள்ள செல்வா முத்துகுமாரனை வணங்கினால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடையும். இத்தலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் செல்வமுத்துக்குமாரனை வழிபாடு செய்வது மூலம் செவ்வாய் தோஷம் பரிகாரம் நிவர்த்தி அடையும் மற்றும் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
முருகப்பெருமானின் ஆறுமுகங்களும், 12 கைகள் செய்யும் தொழில்களும்
முருகனின் ஆறுமுகங்கள் :
- உலகிற்கு ஒளி தருவது ஒரு முகம்,
- வேள்வி காப்பது ஒரு முகம்,
- அடியார் குறை நீக்கி வரமருளுவது ஒரு முகம்,
- வேத ஆகமாய் பொருளை விளக்குவது ஒரு முகம்,
- பகைவரை தீயோரை அழித்து நன்மை செய்வது ஒருமுகம்,
- வள்ளிக்கு மகிழ்வை தருவது ஒருமுகம்,
12 கைகள்:
- 1,2 கைகள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன,
- 3-வைத்து காய் அங்குசம் செலுத்துகிறது,
- 4-வைத்து காய் தொடையில் அமர்த்தி உள்ளது.
- 5,6 – வது கைகள் வேலை சுழற்றுகின்றன.
- 7-வது காய் முனிவர்களுக்கு பொருளை விளக்குகிறது.
- 8-வது காய் மார்பில் உள்ள மலையோடு சேர்ந்துள்ளது.
- 9-வது கை வேள்வி ஏற்கிறது.
- 10-வைத்து கை மணியை ஒலிக்கின்றன.
- 11-வைத்து கை மழையை அளிக்கின்றன. 12-வது கை மணமாலை சூட்டுகிறது.
முருகப்பெருமானின் கிரீடத்தில் உள்ள உறுப்புக்கள்:
கோடகம், பதுமம் , கிம்புரி, மகுடம், தாமம்.
ஆறுபடை வீடுகள் :
- திருப்பரங்குன்றம் (மதுரைக்கு )
- அருகில் திருசீரலைவாய் (திருச்செந்தூர்)
- திருவாவின்குடி (பழனி )
- திருஏரகம் (சுவாமிமலை )
- குன்றுதோறாடல் (திருத்தணிகை )
- பழமுதிர்சோலை (மதுரைக்கு அருகில் )
சூரசம்ஹாரம் :
வல்லவரான இறைவன் உயிர்கலின் மீது கொண்ட கருணையினால் உயிர்களின் ஆணவமாகிய சூரனின் ஸ்தூல உடம்பை போக்கி (ஆணவ மலம் நீங்கின அச்சூரனின் ) ஆத்மாவை தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார் என்பது சூரசம்ஹாரத்தின் உட்கருத்தாகும்.
முருகனை வழிபட வேண்டிய முக்கியமான நாட்கள் :
சஷ்டி திதி, விசாகம், கிருத்திகை நட்சத்திரங்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகியவை. குறிப்பாக முருகனுக்கு வெள்ளிக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு. இவ்விரததால் நினைத்த பயன் கைகூடும்.
கிருத்திகை விரதம் :
ஒவ்வொரு மதமும் கிருத்திகை நட்சத்திரத்தன்று செல்வா முத்துக்குமரனுக்கு சிறப்பு வலி[பாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.