முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா மயிலாடுதுறையில் அதிமுகவினரால் உருவப்படத்திற்கு மலர் தூவி இனிப்புகள் வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109 வது பிறந்தநாள் விழா அரசு சார்பாகவும் அதிமுக சார்பாகவும் பல்வேறு இடங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியான கிட்டப்பா அங்காடியில் அதிமுக நகர செயலாளர் நாஞ்சில் கார்த்தி தலைமையில் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் கலந்துகொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கோமல் அன்பரசன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் செந்தமிழன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், சக்தி, ஒன்றிய செயலாளர்கள் சந்தோஷ் குமார், சிலம்பரசன், பேரூர் கழக செயலாளர் தொல்காப்பியன், உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தினர்.
















