விழுப்புரம் மாவட்டம் இரும்பை என்னுமிடத்தில் அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகும்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் லிங்கம் 3 பாகங்களாக பிளந்து, 3 முகங்களுடன் காணப்படுகிறது. இம்மூன்று பாகங்களையும் ஒரு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜை செய்து வருகின்றனர். இம்முகங்கள் சிவன் பிரம்மா வி~;ணு ஆகிய மும்மூர்த்திகளை குறிப்பதாக சொல்லப்படுகிறது.
சிவனின் தேவராப்படால் பெற்ற 274 சிவாலயங்களில் 265வது தேவாராத்தலமாக உள்ளது. இக்கோயிலில் புன்னை மரம் தலவிருட்சமாக உள்ளது.
சோழ மன்னர்கள் காலத்தில் நன்கு சீரமைத்து கட்டப்பட்டது. இந்த கோயிலின் இறைவனான சிவபெருமானின் மூலவர் லிங்கம் மகாகாளேஸ்வரர் என்றும், உற்சவர் திருமேனி சந்திரசேகரர் என்றும் அழைக்கபடுகிறது. அம்பாள் குயில்மொழி நாயகி, மதுரை சுந்தர நாயகி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்.
புராண காலத்தில் இந்த ஊர் திருஇரும்பைமாகாளம் என அழைக்கப்பட்டது.

இரும்பன், இரும்பாசுரன் ஆகிய இரண்டு அசுரர்களை மகாகாளி வடிவமெடுத்து வதம் புரிந்த பார்வதி தேவிக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோ~ம் விலக இந்த தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்ட போது அந்த தோஷம் நீங்கியதாக ஐதீகம்
மகாகாளர் என்கிற முனிவர் இக்கோயிலின் லிங்கத்தை ஸ்தாபித்தவர் என்பதால் அவரின் பெயராலேயே மகாகாளேஸ்வர் என்று இக்கோயிலின் இறைவன் அழைக்கப்படுகிறார்.
முற்காலத்தில் இவ்வூரில் தங்கி தவம் புரிந்து வந்த கடுவெளி சித்தரின் கடுந்தவத்தின் ஆற்றல் காரணமாக இவ்வூரில் மழைபொழிவு ஏற்படவில்லை என கருதிய மக்கள், ஒரு நடன மாதுவை ஏற்பாடு செய்து அவர் முன்னே நடனமாடி அவரது தவத்தை கலைக்கச் செய்தனர். கடுவெளி சித்தர் கண் திறந்து பார்த்த போது, அந்நாட்டின் மன்னன் சித்தரின் தவம் கலைந்தால் மழைப்பொழிவு ஏற்படும் என்கிற நல்லெண்ணத்திலேயே அவரது தவத்தை தாங்கள் கலைக்கச் செய்ததாக கூறி மன்னிப்பு கேட்டார்.

இதனால் மனமிரங்கிய கடுவெளி சித்தர் அவ்வூரிலேயே தங்கி சிவபணி செய்து வந்த போது நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டு, பஞ்சம் நீங்கியது. இதனால் மகிழ்ந்த மக்கள் அனைவரும் சிவன் கோயிலுக்கு விழா எடுத்து ஊர்வலமாக சென்ற போது, அந்த நாட்டிய பெண் நடமாடிக்கொண்டு செல்கையில், அவள் காலிலிருந்த சிலம்பு ஒன்று கழன்று விழ, அதை உடனடியாக எடுத்து அந்த நடன பெண்ணின் காலில் மாட்டினார் கடுவெளி சித்தர்.
இதனை கண்ட அனைவரும் சித்தரை பற்றி தவறாக பேச ஆரம்பித்தனர். இதனால் வேதனையும், கோபமும் அடைந்த கடுவெளி சித்தர் ஒரு பதிகம் பாட இக்கோயிலின் சிவலிங்கம் மூன்றாக வெடித்து சிதறியது.

இதை கண்டு அதிர்ந்த மக்களும் மன்னனும் அவரிடம் வேண்ட, அவர்களை மன்னித்த கடுவெளி சித்தர் மீண்டும் ஒரு பதிகம் பாட உடைந்த சிவலிங்கம் மீண்டும் ஒன்றாகியது. மகாகாளேஸ்வரர் கோயில் சிறப்புக்கள் இங்கு அரசமரத்திற்கடியில் தவம் செய்த கடுவெளி சித்தரின் தவத்தை அந்த மரத்தின் கிளையில் குயில்
வடிவில் இருந்து அம்பாள் கண்காணித்து வந்ததாகவும், சித்தரின் தவத்தை பற்றி சிவ பெருமானிடம் அம்பாள் கூறி வந்ததால் குயில் மொழி நாயகி என்ற பெயர் அம்பாளுக்கு ஏற்பட்டது.
இங்குள்ள தலவிநாயகர் சுந்தர கணபதி என்று அழைக்கப்படுகிறார். திருஞானசம்பந்தர். பட்டினத்தார் ஆகியோர் சுவாமியை குறித்து பதிகம் பாடியுள்ளனர். அம்பாள் சன்னதிக்கு முன் இடதுபுறத்தில் நடராஜர் தனிச்சன்னத்தியில் இருக்கிறார். இவரது கால் சற்று கீழே மடங்கியபடி இருக்கிறது.

நடராஜரையும் சிவகாமியம்மனையும் சுற்றி அக்னி வளையம் இருக்க அதன் மத்தியில் இவர்கள் காட்சி தருவது வித்தியாசமான அமைப்பாகும். இவ்விடத்தில் நின்று கொண்டு சுhமி அம்பாள் நடராஜர் ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். பின்புறத்தில் முருகன் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்து வள்ளி தெய்வானையுடனும் கால பைரவர் தனிச்சன்னதியில் தெற்கு பாத்தபடியும் காட்சி தருகின்றனர்.
இக்கோயிலில் அம்பாள் தெற்கு திசை பார்த்தவாறு தனி சந்நிதியில் அம்பாள் மகாலட்சுமின் கோலத்தில் காட்சி தருகிறாள்.
இக்கோயிலின் மேற்கு பிரகாரத்தில் சந்திரன் மேற்கு திசை பார்த்தபடி சகலகலா சந்திரனாக காட்சி தருகின்றார். இவருக்கு பால் சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபடுபவர்கள் கல்வி, கலைகளில் சிறந்து விளங்குவதாக கூறப்படுகிறது.

நவகிரக நாயகர்கள் அனைவரும் தங்கள் மனைவியருடன் காட்சி தருகின்றனர். சூரிய பகவான் தாமரை மலர் மீது அமர்ந்து உ~h, பிரதியு~h ஆகிய இரு மனைவியரையும் தனது மடி மீது அமர்த்தியிருக்கும் சூரியனின் அதிசய கோலமாக இக்கோயிலில் காணப்படுகிறது.
பேச்சு சரியாக வராதவர்கள், இசை கலைகளை பயில்பவர்கள், இசை கலைஞர்கள் ஆகியோர் அம்பாளுக்கு தேன் அந்த தேனின் சில துளிகளை தங்கள் நாக்கில் தடவி கொள்கின்றனர். இதனால் தங்களின் குரல் வளம் இசை திறன் மேம்படுவதாக பலன் பெற்றவர்கள் கூறுகின்றனர்.
ஆயுள்விருத்தி ஏற்படவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொண்ட போதும் தங்களுக்கு துன்பம் ஏற்பட்டதாக நினைப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அவர்களின் கோரிக்கைகளும், விருப்பங்களும் நிறைவேறுவதாக மக்கள் இன்னும் நம்புகிறார்கள்.
இக்கோயிலின் சிவராத்திரி, மாசிமகம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் நடைபெறுகிறது. புpரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி சிறப்பு அபிN~கம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தின்றனர்.
இரும்பை என்னுமிடத்தில் அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்