நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது திரைப்படமாக, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் அவருடன் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் மற்றும் ‘டான்சிங் ரோஸ்’ சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலாகும் ‘சலம்பல’ சிங்கிள் நாளை வெளியிடப்பட இருக்கிறது. இந்தப் பாடலை, சூப்பரான வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார்.
இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், அனிருத் மற்றும் சாய் அபயங்கர் இணைந்து இருக்கும் புதிய போஸ்டரையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதராஸி திரைப்படம், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.