வங்காளதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து வங்காளதேச அணி வரும் 17-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
அதன்பின் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இத்தொடர்களுக்கான வங்காளதேச டி20 அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த தொடர்களுக்கான வங்காள்தேச அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.