நீட் நுழைவுத் தேர்வில் பீர், ரம், பிராந்தி குறித்த மாணவர்கள் விடையளிக்கும் வகையில் வினா இடம் பெற்றது கல்வியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வினாத்தாளில் 117 வது கேள்வியாக ‘ஈஸ்ட்’டால் தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத மதுபானம்’ என்ற கேள்விக்கு பீர், ரம், பிராந்தி, விஸ்கி என விடைகள் கொடுத்து சரியானதைத் தேர்வு செய்யும் வகையில் கேட்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ஏற்கனவே இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவது அதிகரித்து வரும் நிலையில் ‘நீட்’ போன்ற உயரிய தேர்வில் இதுபோன்ற வினாவை தவிர்த்திருக்கலாம் என்றனர்.