இந்தியாவில் ஓசோன் காற்று அதிகம் வீசும் தரங்கம்பாடி கடற்கரை துவங்கி, மயிலாடுதுறை மாவட்ட கடற்கரையோர பகுதிகளில், கரை அரிப்பை தடுக்கும் வகையில், ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்யும் பணியில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு, அமைச்சர் துவக்கி வைத்த நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான கழுகு காட்சி வெளியீடு :-
இந்தியாவில் ஓசோன் காற்று அதிகம் வீசும் கடற்கரையாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை விளங்குகின்றது. உலக அளவில் சுவிட்சர்லாந்துக்கு அடுத்த இடத்தில் ஓசன் காற்று வீசும் இடமாக தரங்கம்பாடி உள்ளது. இங்கு 1640 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான டென்மார்க் நாட்டு கோட்டை உள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமான இங்கு கடல் அரிப்பை தடுக்கும் வகையிலும், ஓசன் காற்று பாதிப்பை நீக்கும் வகையிலும், புவி காப்பு அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், துவக்கி வைத்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், புவி காப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் இரணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் பணி விதை நடும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். கோட்டை மற்றும் கடற்கரையைச் சார்ந்த பகுதிகளில் மாணவ மாணவிகள் பனை விதை நடும் காட்சிகளின் கழுகு பார்வை வீடியோ தற்போது வெளியிடப்பட்டு பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

















