சிம்புவின் ஜோடியாக இளம் சென்சேஷன் நடிகை கயாடு லோகர்!

சிம்பு அடுத்து நடிக்கும் திரைப்படம் STR 49, தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பார்க்கிங்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில், சிம்புவுடன் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என முடிவெடுத்திருந்த சந்தானம், நீண்ட இடைவெளிக்கு பிறகு, சிம்புவுக்காக காமெடியனாக நடிக்க சம்மதித்திருக்கிறார் என்பதிலே ரசிகர்கள் ஆச்சரியத்துடன் வரவேற்கின்றனர்.

இந்நிலையில், படத்தின் ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘டிராகன்’ படத்தின் மூலம் பிரபலமான இளம் நடிகை கயாடு லோகர், STR 49 திரைப்படத்தில் சிம்புவின் ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இளம் ஜெனெரேஷனாக வளர்ந்து வரும் கயாடு லோகர், சிம்புவுடன் இணையும் செய்தியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த புதிய ஜோடி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Exit mobile version