‘டாடா’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ ஆகிய வெற்றி படங்களுக்குப் பிறகு, நடிகர் கவின் ‘கிஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இப்படம் வெளியீட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
இதையடுத்து, கவின் தனது நடிப்பில் வெளியாகும் 9-வது படத்தின் பூஜை விழா நேற்று (ஜூலை 17) நடைபெற்றது. இப்படத்தை ‘கனா காணும் காலங்கள்’, ‘கட்சி சேர’ போன்ற திரைப்படங்களை இயக்கிய கென் ராய்சன் இயக்குகிறார். இதில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
பூஜை நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளன. இதனையடுத்து, தற்போது அந்த விழாவின் வீடியோவையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.