முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகருமான மு.க. முத்து (வயது 77) காலமானார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சினிமா துறையிலும் சுருங்கிய காலம் பாராட்டுக்குரிய பயணத்தை மேற்கொண்ட மு.க. முத்து, பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.