சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில், வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி தலைமையில்
ஜமாபந்தியின் தொடக்க நாளான இன்று, புத்தூர் சரகத்திற்கு உட்பட்ட மாதிரிவேலூர், வடரங்கம், அகரஎலத்தூர், கீழமாத்தூர், ஓளையாம்புத்தூர், குன்னம், கோபாலசமுத்திரம், சோதியக்குடி, புத்தூர், அரசூர், கொண்டல், வள்ளுவக்குடி, அகனி உள்ளிட்ட 18 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளான:
புதிய குடும்ப அட்டை (Ration Card) வேண்டுதல்,குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல்,இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பட்டா மாறுதல்,திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை,இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் கோரி விண்ணப்பங்களை அதிகாரிகளிடம் நேரில் வழங்கினர்.பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, அந்தந்த மனுக்கள் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த நிகழ்ச்சியில் சீர்காழி தாசில்தார் ராஜரத்தினம்,தனி தாசில்தார்கள் சபிதா தேவி, சண்முகம், துணை தாசில்தார்கள் பாபு, ரகு, கணேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் குபேந்திரன், வீரபாண்டியன், ராதாகிருஷ்ணன், குணசெல்வன் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.














