மயிலாடுதுறை நகரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காசிராமன் வீடு வீடாக நடந்து சென்று ஆரவாரம் இன்றி துண்டு பிரசுரம் அளித்து பொதுமக்களிடம் தான் போட்டியிடும் விவசாயி சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்:-
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைத்தலைவர் காசிராமன் மயிலாடுதுறையில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளர் காசிராமன் மயிலாடுதுறை நகரில் இரவு திருமஞ்சன வீதி, எடத்தெரு, பாசிக்கடை தெரு, மீன் மார்க்கெட், காந்திஜி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தன் ஆதரவாளர்களுடன் ஆரவாரம் இன்றி வீடு வீடாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரத்தை அளித்து நாம் தமிழர் கட்சியில் தான் போட்டியிடும் விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினார். திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த தான் மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளதாகவும் இந்த ஒருமுறை மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக மாற்றி வாக்களியுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.

















