கோட்டூர் பகுதியில் தண்ணீர் இன்றி 1500 ஏக்கருக்குமேல் பயிர்கள் கருகும் அவலநிலை . விவசாயிகள் நிலத்தில் இறங்கி அரசை கண்டித்து அரைநிர்வான போராட்டம் .
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு கனமழை பெய்த்து இருப்பினும் . இந்த மழையானது விவசாய நிலங்களுக்கு போதிய அளவில் மழை பெய்யவில்லை இந்த நிலையில் .
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பைங்காட்டூர் வாலி ஓடைஆகிய கிராமங்களில்1500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவ சாயிகள்சம்பா நேரடி நெல்விதைப்பு மேற்கொண்டுள்ளனர் . மேட்டூர் அணைதிறந்து 50 நாட்களுக்கு மேலாகியும். தண்ணீர் அந்தப்பகுதிக்கு சென்றடையவில்லை இதனால் விதைப்பு செய்த நெல்மணிகள் காய்ந்துகருகி வருகிறதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் . இதுகுறித்து வேளாண்மைதுறை அதிகாரிகள் நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு உரிய தகவல் கொடுத்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதிகாரிகள் வந்து கூட பார்க்கவில்லை . இதனால் விவசாயிகள் வயலில் இறங்கி மேல் சட்டை இல்லாமல் தமிழைக அரசு மற்றும் அதிகாரிகளை கண்டித்து ( அரை நிர்வான ) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள் . இது குறித்து விவசாயி கூறியதாவது திருப்பனந்தாள் காசிமடத்திற்கு சொந்தமான 1500 ஏக்க ருக்குமேற்பட்ட நிலங்களை பலஆண்டுகளாக எங்கள் கிராம விவசாயிகள் குத்தகை சாகுபடி செய்து வருகிறோம் . குருவை சாகுபடிதான் கிடையாது . சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் அல்லது மழை பொழியும் என்ற நம்பிக்கையில் நாங்கள் கோடை உழவு செய்து நேரடி நெல் விதைப்பு செய்து விட்டோம் . நெல் விதைப்பு செய்து 40 நாட்கள் ஆகியும் தண்ணீர் கிடைக்கவில்லை இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . எங்கள் பாசனப்பகுதியான பொண்ணு கொண்டான் .ஆற்றின் உள்ள சட்ரஸில் தண்ணீரை தேக்கி கொடுத்தால் தான் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வரும் இதை செய்வதற்கு அதிகாரிகள் முன் வரவில்லை ஒரு ஏக்கருக்கு ரூபாய் 25,000 வரை செலவு செய்து நேரடி நெல் விதைப்புசெய்துள்ளோம். இதனால் விவசாயிகளுக்கு பெரும் தொகை செலவு ஆகியுள்ளது . இந்த கருகும் நெல் விதைகளை காப்பாற்ற உடனடியாக தமிழக அரசு பொண்ணு கொன்டான் ஆற்று சட்ரஸை 4 அல்லது 5 நாட்களுக்கு தண்ணீரை தேக்கி விடவேண்டும் . அப்போதுதான் இப்பகுதி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாயும் . இல்லையேல் விவசாயம் பொய்த்து விவசாயிகள் அனைவரும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளபடுவார்கள் என தெரிவித்தார் .
பேட்டி
1, அன்பு விவசாயி பைங்காட்டூர்
- சோமசுந்தரம் விவசாயி பைங்காட்டூர்

















