மயிலாடுதுறையில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீபத்தில் மளிகை கடையுடன் உள்ள வீடு எரிந்து நாசம். 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்:-
மயிலாடுதுறை டவுன் 5-ம் நம்பர் புதுத்தெருவில் மகேஷ் என்பவர் வசிக்கும் வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவு மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கடையில் இருந்த மளிகை பொருட்கள் குளிர்சாதன பெட்டி மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் என பத்து லட்சம் மதிப்பிலான அனைத்து பொருட்களும் தீ விபத்தில் சேதம் அடைந்தது. சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மயிலாடுதுறை போலீசார் மின்காசியின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்







