சென்னை :
நடிகர் அஜித் நடித்த Good Bad Ugly திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அண்மையில் வெளியான இந்த படத்தில், இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி உள்ளிட்ட பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக, இளையராஜா சார்பில் வழக்கறிஞர்கள் கே. தியாகராஜன் மற்றும் ஏ. சரவணன் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில்,
பாடல்களை பயன்படுத்துவதற்கு முன் அனுமதி பெறவில்லை, 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரி அனுப்பிய நோட்டீசுக்கு தயாரிப்பு நிறுவனம் சரியான பதில் அளிக்கவில்லை, “சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து அனுமதி பெற்றோம்” என்றாலும், அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை, என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவது பதிப்புரிமைச் சட்டத்துக்கு முரணானது என்பதால், திரைப்படத்தில் அவற்றை பயன்படுத்த தடை விதிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரப்பட்டது.
இவ்வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அதன்போது, நடிகர் அஜித் நடித்த Good Bad Ugly திரைப்படத்தில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.