September 28, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

எடப்பாடியார் வந்தா தகுதி பட்டியல் கிடையாது.. எல்லா குடும்பத்தலைவிகளுக்கும் ரூ. 2000 ‘கன்பார்ம்’:

by sowmiarajan
February 1, 2026
in News
A A
0
எடப்பாடியார் வந்தா தகுதி பட்டியல் கிடையாது.. எல்லா குடும்பத்தலைவிகளுக்கும் ரூ. 2000 ‘கன்பார்ம்’:
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மதுரை மாவட்டம் உச்சப்பட்டியில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆணைக்கிணங்க, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு, ஏழை எளிய மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மேடையில் உரையாற்றிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து, திருமங்கலம் தொகுதியில் அதிமுகவிற்கு 10,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுத் தந்த வாக்காளர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இதன் மூலம் திருமங்கலம் தொகுதி என்றைக்கும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்துக் கடுமையாகச் சாடிய ஆர்.பி.உதயகுமார், கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துத் தமிழ்நாடு ரத்தக் களறியாக மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். காவல்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர், குற்றங்களைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் கூறிய அவர், கடந்த ஆறு மாதங்களாகத் தமிழ்நாட்டின் டிஜிபி பதவி காலியாக இருப்பதையும், பொறுப்பு அதிகாரியை வைத்துக் கொண்டு நிர்வாகம் நடத்தப்படுவதையும் சுட்டிக்காட்டினார். ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு நிகராகப் புகழ்பெற்ற தமிழகக் காவல்துறை, இன்று பெண்களுக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை அறிக்கையாக இல்லாமல், வெறும் சபாநாயகர் உரையாக மட்டுமே சுருங்கிவிட்டது என்றும் சாடினார்.

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய அவர், திமுகவைப் போலத் தகுதிப் பட்டியல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றாமல், எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ‘குலவிளக்கு’ திட்டத்தின் கீழ் மாதம் 2,000 ரூபாய் நிச்சயம் வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும், எடப்பாடியாரால் கொண்டு வரப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் விரைவில் முடிவடைந்து, அதனைப் பாரதப் பிரதமரும் எடப்பாடியாரும் இணைந்து திறந்து வைப்பார்கள் என்றார். இது தவிர, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும், வீடற்றவர்களுக்கு ‘அம்மா வீட்டு வசதித் திட்டம்’ மூலம் வீடுகள் கட்டித் தரப்படும் மற்றும் பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தரப்படும் என அடுக்கடுக்கான வாக்குறுதிகளை வழங்கி ஆர்.பி.உதயகுமார் எழுச்சியுரை ஆற்றினார்.

Tags: EdappadiFemale HeadsPolitical PromiseRs. 2000welfare scheme
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குடிசை இல்லா தமிழகமே முதல்வரின் இலக்கு: குமரியில் 1000 ‘கனவு இல்லங்கள்’ ஆய்வு செய்த ஆட்சியர் அழகுமீனா!

Next Post

கிராமத்துச் சாலைகளில் விடியல் பயணம்: ஒட்டன்சத்திரத்தில் புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் அர.சக்கரபாணி!

Related Posts

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், படம் வெற்றி அடைய வேண்டி சிறப்பு வழிபாடு

September 28, 2026

கீழ்வேளூர் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் பயங்கர உடைப்பு: பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்

செங்கல்பட்டு அருகே துர்நாற்றம் கலந்த குடிநீர் விநியோகம் நோய்த்தொற்று அபாயம் .மக்கள் அச்சம்

இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- 52,280 பறிமுதல்- 2,20,546 வரி வசூல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வாக்கு சேகரிப்பு

September 24, 2026
“கதை கேட்டவுடனேயே சிரிப்பை நிறுத்தவே முடியலை… ரிவால்வர் ரீட்டா ஒரு பக்கா டார்க் காமெடி!”

November 26, 2025
பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்: துவங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’

May 7, 2025
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், படம் வெற்றி அடைய வேண்டி சிறப்பு வழிபாடு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், படம் வெற்றி அடைய வேண்டி சிறப்பு வழிபாடு

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

கீழ்வேளூர் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் பயங்கர உடைப்பு: பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

செங்கல்பட்டு அருகே துர்நாற்றம் கலந்த குடிநீர் விநியோகம் நோய்த்தொற்று அபாயம் .மக்கள் அச்சம்

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், படம் வெற்றி அடைய வேண்டி சிறப்பு வழிபாடு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

கீழ்வேளூர் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் பயங்கர உடைப்பு: பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

செங்கல்பட்டு அருகே துர்நாற்றம் கலந்த குடிநீர் விநியோகம் நோய்த்தொற்று அபாயம் .மக்கள் அச்சம்

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

September 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.