முத்தக் காட்சிகளில் இனி நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு விஷால் எடுத்த அதிரடி முடிவு

சென்னை :
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை வழங்கிய நடிகர் விஷால், சமீபத்தில் நடிகை தன்சிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது திரைப்பட வாழ்க்கையைப் பற்றிய முக்கிய முடிவை அறிவித்தார்.

விஷால் நடித்த ‘மார்க் ஆண்டனி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலில் சாதனை படைத்தது.

நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய விஷால், நிச்சயதார்த்த நிகழ்வில் செய்தியாளர்களிடம்,

“தொலைபேசி மற்றும் இணையம் வழியாக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இன்னும் இரண்டு மாதங்களில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு எங்களின் திருமணமும் நடைபெறும்,”
என்று கூறினார்.

மேலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையில் மாற்றங்கள் வரப்போகின்றன என்று தெரிவித்த அவர்,

“இனி காதல் கதைகளில் நடிப்பேன். ஆனால் முத்தக் காட்சிகளில் இனிமேல் நடிக்க மாட்டேன்,” என்று தெளிவுபடுத்தினார்.

விஷாலின் இந்த முடிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version