மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டத்தூர் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு பண்டாரவடை கிராமத்தை சேர்ந்தவர்கள் கருணாநிதி – எழிலரசி.கூலித்தொழிலாளிகளான இவர்களுக்கு 30 வயதில் ஸ்ரீதர் என்ற மாற்றுத் திறனாளி மகன் உள்ளார்.இவர் நடக்க முடியாமல் மண்டியிட்டு நடந்து செல்லும் போது தமிழக வெற்றி கழகம் மாவட்ட செயலாளர் குட்டி கோபியிடம் எனது மகனுக்கு மூன்று சக்கர சைக்கிள் கேட்டுள்ளனர்.இதனை அடுத்து தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தமிழக வெற்றி கழக மத்திய ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரமேஷ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் குட்டி கோபி தலைமையில் தெற்கு பண்டாரவடை கிராமத்திற்கு சென்று மாற்றுத் திறனாளி ஸ்ரீதர் பேட்டரி சைக்கிள் வழங்கினர்.இதனால் மகிழ்ச்சி அடைந்த இளைஞரும் பெற்றோரும் தவெக நிர்வாகிகளிக்கு ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.பிறவியிலேயே மாற்றுத்திறன் கொண்ட தனது மகன் 30 ஆண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு வந்ததாகவும், இனி சிரமங்கள் குறையும் எனவும் பெற்றவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதில் விவசாய அணி அமைப்பாளர் அன்புச்செல்வன், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் நடராஜ், ஒன்றிய செயலாளர்கள் கமல், ராஜா, வசந்த், சந்தோஷ் , பசுபதி, தகவல் தொழில் நுட்ப அணி மணிகண்டன், விவசாயி அணி எடிசன், வினோத் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கும் சைக்கிள் – தவெக நிர்வாகிகள் வழங்கினார்
-
By Aruna

- Categories: News
- Tags: district newstamilnaduTVKTVK VIJAY
Related Content
தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் - குதிரை சவாரிச் செய்து உற்சாகம்
By
Aruna
January 1, 2026
மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் - திரளான பக்தர்கள் வழிபாடு
By
Aruna
January 1, 2026
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.
By
Aruna
January 1, 2026
உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் - கையால் அபிஷேகம் செய்து வழிபாடு
By
Aruna
January 1, 2026