திமுக-வில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்

மனோஜ் பாண்டியன், சின்னசாமி உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் பலர் அண்மையில் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சுப்புரத்தினம் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

இதே போன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்.ஏ பால கங்காதரனும் திமுகவில் இணைந்தார். இருவரும் 1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version