காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக, மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
சோனியா காந்திக்கு, நீண்டகாலமாக இருமல் பிரச்சினை உள்ளது என்றும், டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சினை காரணமாக அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சோனியாகாந்தி, தற்போது மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பதாகவும், மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது

















