ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தனியார் நடத்தியபோது தான் பிரச்சினைகள் ஏற்பட்டது என்பதால், அரசே நடத்துவதுதான் சரியானதாக இருக்கும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மாவட்ட நிர்வாகம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உள்ளூர் அமைப்பினரிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரியும் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஐ.பி.எல். போட்டிகள் அல்ல என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தனியார் நடத்தியபோதுதான் பிரச்சினைகள் ஏற்பட்டது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். எனவே ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அரசே நடத்துவதுதான் சரியாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
