தெற்கு மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நேற்று காலை தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நிலைகொண்டிருந்தது. இது இன்று புயலாக மாறி, மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் என தெரிவி க்கப்பட்டுள்ளது.
இது தொடர்ந்த இதே திசையில் பயணித்து இன்று மாலை அல்லது இரவு இலங்கையின் பொட்டுவில் மற்றும் திரிகோணமலைக்கு இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. டிட்வா புயலைத் தொடர்ந்து, இதுவும் இலங்கை கரையை நோக்கியே நகர்கிறது. மிகஅரிதாக ஜனவரி மாதத்தில் வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
