பிளவுபட்டுள்ள பா.ம.கவின் இரு அணிகளையும் ஒற்றுமைப்படுத்தி கூட்டணியில் இணைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி வந்தார். அன்புமணியும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை அன்புமணி சந்தித்துப் பேசினார். அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உடன் இருந்தார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், அன்புமணியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி கூட்டணியும், தொகுதிப் பங்கீடும் முடிவாகிவிட்டதாகத் தெரிவித்தார். மேலும் சில கட்சிகளும் தங்கள் கூட்டணிக்கு வரவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி தி.மு.க. அரசு மீது அனைத்து தரப்பு மக்களும் ஆத்திரத்தில் இருப்பதால் தங்கள் கூட்டணி சிறப்பான வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
