தரங்கபாடி அருகே கூரை வீட்டில் தீ விபத்து – வீட்டில் உள்ள பொருட்கள் முற்றிலுமாக சேதம்

தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் வடக்கு தெருவில் பழனிவேல் என்பவரது கூரை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பழனிவேல் கூரை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டை பூட்டி விட்டு அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு வீடு தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது அருகில் இருந்தவர்கள் அதனை கண்டு தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் இருப்பினும் மலமலவென தீயானது பரவி வீடு முழுவதும் தீக்கிரையானது. தகவல் அறிந்து வந்த தரங்கம்பாடி தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவமால் கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த மின்சாதன பொருட்கள், பீரோ கட்டில், மேலும் பீரோவில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணம், பாடபுத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முற்றிலுமாக எரிந்து சேதமானது. மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதா வேறு ஏதாவது காரணமா என்று பொறையார் போலீசார் விசாரணை மெற்கொண்டுள்ளனர்.

Exit mobile version