பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
கடந்த ஜூலை மாதம் 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியில் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. வரும் 19-ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயர்கல்வி ஆணையம் அமைப்பது, பெருநிறுவன சட்டம் மற்றும் பங்குச் சந்தை உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்டத் தொடரை சுமூகமாக நடத்தவும், ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன் வைத்து, ஒத்துழைப்பு தருமாறும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.எனினும், எஸ்.ஐ.ஆர்.பணிகள், டெல்லி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் கூட்டத்தொடர் புயலை கிளப்பும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.















