பிரேமலதாவின் தாயார் மறைவு – முதல்வர் இரங்கல்

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மற்றும் கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் தாயார் அம்சவேணி காலமானார். அவருக்கு வயது 83.
வயது மூப்பால் அண்மைக் காலமாக உடல் நலிவுற்றிருந்த அவர், இன்று காலை 7-30 மணிக்கு, சென்னையில் காலமானார். மறைந்த அம்சவேணியின் இறுதி ஊர்வலம் நாளை நண்பகல் 1 மணிக்கு விருகம்பாக்கம் இல்லத்தில் தொடங்கும் என, தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரேமலதாவின் தாயார் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version