மகாத்மா காந்தியடிகளின் 156 வது பிறந்த நாளை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் தீரன் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கண்காணிப்பாளர் விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் சிறுவர் சிறுமிகள் மாணவ மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மன்னார்குடியிலிருந்து உள்ளிக்கோட்டை வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை சாலைகளில் ஸ்கேட்டிங் செய்து இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும்
, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்கும் சாலை விதிகளை அனைவரும் கடைப்பிடித்து பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர் இதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

















