5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்
பேட்டி மணிமாறன் – மாவட்ட செயலாளர்
நாகை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, சுகாதார ஆய்வாளர்களின் பதவி உயர்வு பணியிடங்களான TPA, HE, BHS, NMS ஆகியவற்றையும், பெருமளவில் காலியாக உள்ள டெங்கு தடுப்பு பணியிடங்களான சுகாதார ஆய்வாளர் நிலை-2 இடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், டெங்கு மற்றும் காய்ச்சல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் புகை மருந்து அடித்தல், தூய்மைப் பணி உள்ளிட்ட பிற துறை சார்ந்த பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் சுகாதார ஆய்வாளர்களை மட்டுமே பொறுப்பாக்கும் போக்கை கைவிட வேண்டும் என்றும், தீவிர பணிச்சுமையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக LCDC முகாம்களை தள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. அத்துடன் சங்கத்தின் 51-வது மாநில மாநாட்டு தீர்மானங்கள் தொடர்பாக துறை அதிகாரிகள் உடனடியாக அழைத்து பேசி உரிய தீர்வு காண வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
















