சென்னை:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
தொலைபேசி வழியாகத் தகவல் அளித்த அமைச்சர், “சுகாதாரத்துறை அமைச்சருடன் ஏற்கனவே இப்பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளோம். தற்போது தமிழ்நாட்டில் பெரிதாக பாதிப்பு இல்லை. இருப்பினும், எதிர்காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படுமானால், சுகாதாரத் துறையின் பரிந்துரைகளின் பேரில் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்,” என்றார்.
தற்போதைய நிலைமையைக் கணிப்பின் அடிப்படையில் பள்ளிகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் அல்லது வழிகாட்டுதல்களும் விதிக்கப்படவில்லை என்றும், “பாதிப்பு எண்ணிக்கையை பொருத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். பள்ளிக் கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறைகள் இரண்டும் ஒத்துழைத்து நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.