செங்கல்பட்டு திருப்போரூர்
ஸ்ரீ கந்தசாமி திருக்கோயிலில் சூரசம்ஹார திருவிழா கோலாகலம்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார திருவிழா இன்று மாலை 6:00 மணி முதல் கோயில் கிழக்கு முகப்பு மற்றும் மாடவீதிகளில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு அடுத்துள்ள ஆனூர் கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலில் சூரசம்ஹார திருவிழா நடைபெற்று வருகிறது.
சுற்றுவட்டார பகுதியில் இருந்து மக்கள் சாமி தரிசனம் செய்து தீபம் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவிலில் சூரசம்ஹார திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.







