பஸ்சில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் அரசு பள்ளி மாணவர்கள்கூடுதல் பஸ் இயக்க கோரிக்கைஒடுகத்தூர் பகுதியில் பரபரப்பு
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதிகளில் பஸ் படிகட்டு, ஜன்னல் கம்பி, பின்பக்க ஏணி போன்றவற்றில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் அரசு பள்ளி மாணவர்கள்வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.அதேபோல் ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு ஆண்கள், மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் அருகருகே செயல்பட்டு வருகிறது.
இதில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும் என்றால் அரசு மற்றும் தனியார் பஸ்களையே நம்பி உள்ளனர்.ஆனால், குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கும் வர முடியாமலும், வீட்டிற்கும் செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.அது மட்டுமின்றி காலை, மாலையிலும் பஸ்கள் கிடைக்காமல் மாணவர்கள் அந்த நேரத்தில் வரும் பஸ்களில் முண்டியடித்து முட்டி மோதி கடும் கூட்ட நெரிசலில் சிக்கி செல்கின்றனர்.அதே போல் பஸ்சில் இடம் கிடைக்காததால் பஸ் படிகட்டு, ஜன்னல்கம்பி, பின்பக்க ஏணி ஆகியவற்றில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் சூழல் நிலவி வருகிறது.இந்த நிலையில் நேற்று மாலை ஒடுகத்தூரில் இருந்து மேலரசம்பட்டு கிராமத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.இதனை பார்த்த பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை சிலர் செல்போனில் வீடிடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
தற்போது இந்த வீடியோ வைரலாகி பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

















