தோட்டக்கலைத் துறை சார்பில் காய்கறி சாகுபடியில் உயர் தொழில் நுட்பங்கள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மயிலாடுதுறையில் நடைபெற்றது ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு :-
தோட்டக்கலைத் துறை சார்பில், மாற்று பயிர் சாகுபடியாக காய்கறி பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி பூங்கொடி கருத்தரங்கை துவக்கி வைத்தார். வேளாண்துறை இணை இயக்குனர் விஜயராகவன், மற்றும் வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்று காய்கறி சாகுபடிகள் உயர் தொழில்நுட்பங்கள், உர மேலாண்மை, பூச்சி நோய் மேலாண்மை, தோட்டக்கலைத் துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். கருத்தரங்கை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகள் பழங்கள் மற்றும் அதன் சாகுபடிகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் இதில் பங்கேற்று பயன் பெற்றனர்.
















